பெங்களூரு: கோவிட்-19 தொற்று ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள், தங்கள் அவசர தேவைகளுக்கு உடனடி கடனை வங்கி கிளைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என கனரா வங்கி தலைமை தெரிவித்துள்ளது.
கனரா வங்கியானது இதுவரையில் விவசாயக் கடனாக 4300 கோடி ரூபாயை, ஆறு லட்சம் பயனர்களுக்கு கொடுத்திருக்கிறது. வங்கியிலிருந்து கடனைப் பெறுவதற்கு தேவையான சேவைகளை வங்கி தரப்பில் இருந்து நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.எம்.ஐ. நீட்டிப்புச் சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா?
மேலும், வங்கி தரப்பில் மார்ச் 2020 முதல் இதுவரை, 60ஆயிரம் கோடி ரூபாயை பெரு நிறுவனங்களுக்கும், சிறு குறு நிறுவனங்களுக்கும் கொடுத்து உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.