ETV Bharat / briefs

கரோனா நடவடிக்கைகள் என்னென்ன? - மாவட்ட ஆட்சியரிடம் திமுக கேள்வி மனு! - எம் பி தனுஷ் குமார்

தென்காசி: கரோனா தொற்று பரிசோதனை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

tenkasi MP petition to district collector

author img

By

Published : Jul 4, 2020, 5:17 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகம் படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில்தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகப்படியான கரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கரோனா தொற்று பரிசோதனை குறித்து பல்வேறு கேள்விகளை திமுகவினர் மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்களை கேட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனை சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து அந்த மனுவில், சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் விவரம், இதுவரை எத்தனை நபருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை எடுத்தவர்களின் விவரம், மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள், இதர உபகரணங்கள் பற்றிய விவரம், தனிநபர் கவச உடை எத்தனை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகள் அதில் கேட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெளியே சுற்றுபவர்கள் மீது குற்ற வழக்கு - ஆட்சியர் எச்சரிக்கை

கரோனா நடவடிக்கைகள் என்னென்ன? - மாவட்ட ஆட்சியரிடம் திமுக கேள்வி மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.