தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,384 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 283 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 193 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.