காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பூர்விகா செல்போன் விற்பனை நிலையத்தில் அதிக மக்கள் கூடியுள்ளதாகவும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அங்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், கடையில் இருந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர்
இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊரடங்கு அமலிலிருந்த நேரத்தில் திறக்கப்ட்ட இரண்டு உணவகங்களுக்கும் சீல் வைத்தனர்.
இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பிரபல செல்போன் கடைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.