ETV Bharat / briefs

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் தேர்வு

author img

By

Published : Jul 9, 2020, 3:01 AM IST

சென்னை: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவராக அப்துல் ஜப்பார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் தேர்வு
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் தேர்வு

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பொதுப்பணித்துறை கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக கோவை யுனைடெட் ஜமாத் பொதுச் செயலாளர் அப்துல் ஜப்பார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அரசாணை (ப) எண்.41, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஹஜ் குழு சட்டம், 2002-ன்படி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, அரசாணை (நிலை) எண்.46, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, நாள்15.06.2020-யில், 12 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரி ராஜ்நிவாஸில் கிருமிநாசினி தெளிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.