திருவண்ணாமலை மாவட்டம், வழுதலங்குணம் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(55). இவர் மீது நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் ஏழுமலையை திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
பின்னர் ஏழுமலையின் சட்டவிரோதச் செயலைக் கட்டுப்படுத்த வேண்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், ஆட்சியர் கந்தசாமி ஏழுமலையைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலையில் கடந்த ஆறு மாத காலத்தில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலையில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்கள் - இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை!