திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகிறது என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 13இல் தாக்கல்
திமுக அரசு பொறுப்பேற்ற பின் ஆளுநர் உரைக்குப்பின் சட்டபேரவையின் முதல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசின் முதல் முழு நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்து உள்ளார்.
விவசாயத்திற்குத் தனி நிதி நிலை அறிக்கை
இதில் திருத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளபடி விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.
கரோனா காரணமாக இந்த முறையும் சட்டப்பேரவைக்கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி சபை எந்த நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படும்.