ETV Bharat / city

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு - புதுக்கோட்டை சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

author img

By

Published : Jan 3, 2022, 6:43 PM IST

Updated : Jan 3, 2022, 10:02 PM IST

18:41 January 03

தலையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நார்த்தாமலை அருகே மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்களில் துப்பாக்கிப் பயிற்சி மையம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் கடந்த 30ஆம் தேதியன்று வழக்கம்போல் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டுபாய்ந்துள்ளது. இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குச் சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (ஜனவரி 3) அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் சிறுவனின் பெற்றோர், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: fireworks accident: சிவகாசி பட்டாசு விபத்து – 3 தனிப்படை அமைப்பு

Last Updated : Jan 3, 2022, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.