சென்னை : தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் இன்று சந்தித்தார். அப்போது நீட் தேர்வு தொடர்பான 165 பக்க அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பான 165 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம தாக்கல் செய்ததாக தெரிவித்தார். நீட் தேர்வின் தாக்கம் குறித்த முக்கிய அம்சங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் விளக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வு குறித்து அனைத்து தரப்பு மாணவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டார்.
மொத்தம் 86,432 மனுக்கள் வந்துள்ளதாகவும், அதில் நீட் தேர்வு வேண்டாம் என்ற கருத்தே பெரும்பான்மையாக உள்ளதாகவும் தெரிவித்தார். குழுவின் பணிக்காலம் முடிவடைந்து உள்ளதாக தெரிவித்த அவர், அரசு அளித்த கால அவகாசம் போதுமானதாக இருந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க :நீட் தேர்வில் விடை அளிக்கும் முறையில் மாற்றம்