அண்மையில் ஒன்றிய அரசு, 1952-ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை செய்து வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என வெளியிட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு சினிமா பிரபலங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஒளிப்பதிவு வரைவு மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதாக தெரவித்துள்ளார். எனவே இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திறகு எதிராக வரைவு மசோதா இருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அதுதொடர்பான முயற்சிகளை கைவிட வேண்டும் எனறும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க :ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: நடிகர் விஷால் ட்வீட்!