சமூக வலைதளத்தில் கேடி ராகவன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் தெரிவத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "தமிழ்நாட்டு மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.
சமூக வலைதளங்களில் வீடியோ
நான் 30 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.
குற்றச்சாட்டு - மறுப்பு
என்னையும், என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!" என கே.டி ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன்