ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். முதல் இரண்டு கட்டமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தத் தேர்வு நடந்தது. இதனையடுத்து, அடுத்த கட்டமாக ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெற இருந்தது.
ஆனால், தற்போது நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவருவதால், மாணவர்களின் நலன்கருதி ஜேஇஇ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கு 15 நாள்களுக்கு முன்னர், தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக, தினசரி கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைத் தாண்டிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செல்லப்பிராணியை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரர்கள்!