ETV Bharat / state

நகைக் கடையில் தீ விபத்து - ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் - etv bharat

நகைக் கடையில் தீ விபத்து
நகைக் கடையில் தீ விபத்து
author img

By

Published : Aug 23, 2021, 3:51 PM IST

Updated : Aug 23, 2021, 5:37 PM IST

15:45 August 23

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்து

சென்னை: பூக்கடை அருகே என்.எஸ்.சி போஸ் சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இன்று (ஆக.23) காலை வழக்கம்போல் கடை திறக்கப்பட்டு இரண்டு தளங்களில் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். 

மதியம் சுமார் 1.20 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டு, நகைக்கடையின் முகப்பில் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். 

கட்டடம் முழுவதும் தீ

கடையின் முதல் தளம், இரண்டாவது தளம் என கட்டடம் முழுவதும் தீ பரவியது. கடை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் பூக்கடை, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

உடனடியாக அங்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை

நல்வாய்ப்பாக, தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதிகளவில் பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பூக்கடை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Last Updated : Aug 23, 2021, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.