ETV Bharat / crime

நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது - நடிகை சாந்தினி

ex minister manikandan arrested
ex minister manikandan arrested
author img

By

Published : Jun 20, 2021, 8:16 AM IST

Updated : Jun 20, 2021, 11:10 AM IST

08:08 June 20

சென்னை: துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தமிழ் திரைப்பட துணை நடிகை ஒருவர் காவல் துறையில் மே 28ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இதனால் அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் மதுரை உள்ளிட்ட இடங்களில் அவரை தேடி வந்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவரை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த சூழலில் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் பெங்களூரில் வைத்து அதிகாலையில் கைது செய்துள்ளனர். மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Last Updated : Jun 20, 2021, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.