ETV Bharat / bharat

பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - பெகாசஸ் விவகாரம் - 6 திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

PEGASUS
PEGASUS
author img

By

Published : Aug 4, 2021, 1:21 PM IST

Updated : Aug 4, 2021, 5:50 PM IST

13:18 August 04

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் அமளியின் காரணமாக, மாநிலங்களவை இன்று (ஜூலை 8) நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கண்டன முழக்கங்களையும் போராட்டப் பதாகைகளையும் கையில் பிடித்திருந்த, திருணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆறுபேரை இன்றைய நாள் முழுவதும் இடை நீக்கம் செய்வதாக மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

ஆறு பேர் யார்?

மாநிலங்களவையின் மரபை மீறி, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் கண்டன பதாகைகளை தூக்கிக்கொண்டு அவையின் மையப்பகுதிக்கு வந்ததால்  மாநிலங்களவைச்சட்டம் 255இன் படி அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக, வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குரல் எழுப்பிய எம்.பி.க்களின் பட்டியலை மாநிலங்களவைச் செயலரிடம் வெங்கையா நாயுடு தரச்சொல்லி கேட்டார்.   

அதில் அந்த திருணமூல் காங்கிரஸ் எம்.பிக்களின் பெயர்களான, செல்வி டோலா சென், திரு. நடிமுல் ஹக், திரு. அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், திருமதி. சந்தா செட்ரி, செல்வி. அர்பிதா கோஷ், திருமதி. மஸம் நூர் ஆகியோரின் பெயர் இருந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  

முன்னதாக வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக சட்டம் 267இன் படி, விவாதிக்க சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், விஷம்பூர் பிரசாத் நிஷாத் மற்றும் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சிவதாசன் ஆகியோர் மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், இதுகுறித்து விவாதிக்க வெங்கையா நாயுடு அனுமதி தர மறுத்து விட்டார். 
இதைத் தொடர்ந்து,  கொல்கத்தா நகரைச் சார்ந்த ஜவஹர் சிர்கர் புதிய மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.

பெகசாஸ் குறித்து விவாதிக்க நேரம் கேட்பு 

பின்னர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விவாதிக்க நேரம் ஒதுக்குமாறு எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், "நான் அதை கடந்துவிட்டேன். இது ஒரு தொடரும் பிரச்னை. ஆனால் முக்கியமானது. எனவே, இது மற்ற ஏற்பாட்டின் கீழ் விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளப்படுகிறது" என்று நாயுடு கூறினார்.

"இப்போது, விவசாயிகளின் போராட்டம் பற்றி பேசலாம். மேலும் விலை உயர்வு, பொருளாதார நிலை பற்றியும் விவாதிக்கலாம். மத்திய அரசு கூட இது தொடர்பாக விவாதிக்க ஆர்வம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி விவாதிப்போம். பொருளாதார நிலை, விலை உயர்வு மற்றும் பிறவற்றை பற்றி விவாதிப்போம்"என்று பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸ்களை நிராகரித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இவ்வாறு கூறினார்.

இந்த நோட்டீஸ்களை திருணமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சுகேன்ந்து ராய் (திருணமூல்), மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் (இருவரும் காங்கிரஸ்), சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த இளமாறம் கரீம் மற்றும் வி. சிவதாஸன் மற்றும் சிபிஐ கட்சியைச் சேர்ந்த பினோய் விஸ்வம் ஆகியோர் அளித்துள்ளனர். 

என்னென்ன பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன?

இந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் கரோனா பிரச்னை, வேளாண் திருத்த சட்டங்கள் மற்றும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

பெகாசஸ் குறித்த ஊடக அறிக்கை இந்திய ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் முயற்சி என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணா கூறியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் அமர்வுகள் தொடங்கியுள்ளன.

இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.   

இதையும் படிங்க:ஹைதராபாத் வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு

Last Updated : Aug 4, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.