ETV Bharat / bharat

பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காத பெண் ரயிலிலிருந்து தள்ளி விட்டுக்கொலை - Woman killed after thrown out of moving train

ஹரியானாவில் பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காததால் அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காத பெண் ரயிலிலிருந்து தள்ளி விட்டுக்கொலை

author img

By

Published : Sep 2, 2022, 8:35 PM IST

Updated : Sep 3, 2022, 10:24 AM IST

ஃபதேஹாபாத்: டொஹானாவிலுள்ள தூர் நகரைச் சார்ந்த மண்டீப் கௌர் எனும் பெண், தனது ஒன்பது வயது மகனுடன் ரொஹடக்கிலுள்ள தன் மாமியார் வீட்டிற்கு வருவதற்காக நேற்று(செப்.1) ரயிலில் வந்துகொண்டிருந்தார். அப்போது, ஒருவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சிசெய்துள்ளார்.

அதற்கு அந்தப் பெண் ஒத்துழைக்காததால், இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் விலைவாக அந்தப் பெண்ணை, அந்த நபர் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தள்ளிவிட்ட அந்த நபரும் ரயிலில் இருந்து குதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தன் மனைவியை அழைத்துச்செல்ல டொஹானா ரயில் நிலையத்தில் காத்திருந்த கணவர், தன் மனைவி ரயிலில் வந்து சேராததால் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தேடுதலை ஆரம்பித்த காவல் துறையினருக்கு மறுநாளான இன்று(செப்.2) இறந்த நிலையில், டொஹானா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மண்டீப்பின் உடல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அவரது உடலை உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.

அதுமட்டுமின்றி, அதே ரயிலில் இருந்து குற்றவாளி என சாட்சிகளால் சொல்லப்படும் அந்த நபரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படுகாயமடைந்த அந்த நபருக்கு அக்ரோஹா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளித்து வருகின்றனர்.

மேலும், இவர் தான் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளியா..? என்பதை உறுதி செய்ய இவர் உடல்நிலை சரியானதும் சம்பவத்தின் முக்கிய சாட்சியான இறந்த பெண்ணின் மகனை வைத்து அடையாளம் காட்டப்படும், என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோடிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக கைதான டீஸ்டா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமீன்

Last Updated : Sep 3, 2022, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.