ஜார்க்கண்ட் மாநிலம், பலமு பகுதியைச்சேர்ந்த இரானி கும்பல் தொடர்பாக ஜார்க்கண்ட் காவல் துறையினருக்கு உத்தரப்பிரதேச காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சம்பவங்களை செய்யும் கும்பல், இரானி கும்பல் ஆகும்.
இது குறித்து பலமு காவல் துறைக்கு உத்தரப்பிரதேச காவல் துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ’இரானி கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக’ கூறப்படுகிறது. பலமு எஸ்.பி. சந்தன் குமார், உத்தரப்பிரதேச காவல்துறையிடம் இருந்து கடிதத்தை பெற்றதையும் காவல் துறை அலுவலர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியிருப்பதாகவும் கூறினார்.
இரானி கும்பலின் குற்றப்பின்னணி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கடந்த மாதம் இந்த இரானி கும்பல் பல குற்றச்சம்பவங்களை நிகழ்த்தியது. இந்தக் கும்பலில் தொடர்புடைய குற்றவாளிகள் காவல் துறையினர் போல் வேடமிட்டு வழிப்பறி, போன்ற குற்றச்சம்பவங்களை செய்து வந்தனர். இதற்கிடையில், இரானி கும்பலைச் சேர்ந்த நான்கு குற்றவாளிகளை வாரணாசி போலீஸார் கைது செய்தனர்.
இரானி கும்பலின் மாஸ்டர் யுக்தி இதுதான்!: இரானி கும்பலில் ஏழு முதல் எட்டு குற்றவாளிகள் உள்ளதாகவும்; சம்பவத்தை நடத்துவதற்கு முன், அவர்கள் நகரத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு, குற்றச்செயல்களைச் செய்துமுடித்தவுடன் சில மணி நேரங்களிலேயே ஊரை விட்டுத் தப்பிவிடுகிறார்கள். உத்தரப்பிரதேச காவல்துறையின் கடிதத்தில், இரானி கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூட வெளிநாட்டவர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பலில் ஈடுபட்டுள்ள அனைத்து குற்றவாளிகளும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள்.
இந்த கும்பல் தற்போது ஜார்க்கண்ட் மற்றும் பிகார் மாநிலத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வருவதாகவும், இந்த கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால், உத்தரப்பிரதேச காவல் துறைக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிக்கவும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு