ராஜஸ்தான்: கோட்டா அருகே ஆறு குழந்தைகளை நேற்று (நவம்பர் 5) நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தைகளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வீட்டின் அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்ததாகவும், குழந்தைகளின் முகத்தை பலமுறை கடித்ததாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறினர். மேலும் நாய்களை பிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மாநகராட்சி அலுவலர்கள் கையில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதில் நான்கு குழந்தைகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு குழந்தைகளின் காயங்கள் கடுமையாக இருப்பதால், அவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினர்.
மூன்று நாள்களுக்கு முன்பு தேகடா பகுதியில் நாய்கள் கடித்து பெண்கள், குழந்தைகள் என 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெருக்களில் உள்ள நாய்களைப்பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாம்பைக்கண்டு பயம்கொள்ள வேண்டாம்; இனி பாம்புகளை மீட்க 'சர்ப்பா' செயலி!