ETV Bharat / bharat

Ex-army பென்ஷன் குறித்த கவரை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் - அடிப்படைச்செயல்பாடுகளுக்கு எதிர் எனப் புகார்

முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதிய நிலுவைத்தொகை குறித்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீலிடப்பட்ட கவரை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சீலிடப்பட்ட கவரை ஏற்க மறுப்பு
சீலிடப்பட்ட கவரை ஏற்க மறுப்பு
author img

By

Published : Mar 20, 2023, 7:56 PM IST

டெல்லி: முன்னாள் ராணுவத்தினருக்காக 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், நிலுவைத் தொகையை மார்ச் 15ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டது.

இதற்கிடையே நிலுவைத் தொகையை 4 தவணைகளாக வழங்குவதாக ராணுவ அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். அப்போது, 4 தவணைகளாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை ராணுவ அமைச்சகம் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை முன்னாள் வீரர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 20) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி, சீலிடப்பட்ட கவரை நீதிபதிகளிடம் சமர்பித்தார். அப்போது சீலிடப்பட்ட கவரை ஏற்க மறுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இதுபோன்ற சீலிடப்பட்ட கவரை வழங்குவதை தனிப்பட்ட முறையில் நான் மறுக்கிறேன். நீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு இது.

இதில் என்ன ரகசியம் உள்ளது? சீலிடப்பட்ட கவர்களை தாக்கல் செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி கொண்டு வரப்படுவது அவசியம். உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டால் தான், அதை பார்த்து உயர் நீதிமன்றமும் இதுபோல செயல்படும். இதுபோன்ற நடைமுறை நீதிமன்றத்தின் அடிப்படை செயல்பாடுகளுக்கு எதிராக உள்ளது" என்றார்.

பின்னர் சீலிடபட்ட கவரில் இருந்த அறிக்கையை வாசித்த அட்டர்னி ஜெனரல், "முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கும் அளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. மொத்தம் 25 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.28,000 கோடி நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.5.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியத்துக்காக ரூ.1.32 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1.2 லட்சம் கோடி கடந்த பிப்ரவரி வரை வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "2019-2022-ம் ஆண்டு வரை, முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்க வேண்டிய அனைத்து ஓய்வூதிய தொகையையும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு கேசிஆர் மகள் கவிதா ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.