பெங்களுரு: கார்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள சாந்தி நகர் பேருந்து நிலையம் அருகே காரில் சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்கு சென்ற பிறகு தனது தவறை புரிந்துகொண்டு, அதற்கான அபராதம் செலுத்த முன்வந்தார். அதன்படி பெங்களூரு போக்குவரத்து துறை ட்விட்டர் கணக்கை டேக் செய்து, தான் விதிகளை மீறியதாகவும், அதற்கான அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதகாவும் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்துறை சிக்னலை மீறியதற்கான சம்பந்தப்பட்ட போக்குவரத்து பிரிவில் அபராதத்தை செலுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அந்த நபரின் பெயர் பால் கிருஷ்ண பிர்லா.
இதையும் படிங்க:கேரள அரசுக்கு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த பிஎப்ஐ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு