புதுச்சேரி: Tsunami 17th memorial day: புதுச்சேரியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால் புதுவை மற்றும் காரைக்காலில் பலர் உயிரிழந்தனர்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் டிசம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை காந்தி சிலை அருகே அரசு சார்பில் புதுச்சேரி அரசின் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், திமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பத், அனிபால் கென்னடி ஆகியோர் சுனாமி நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பல்வேறு கட்சியினர் அஞ்சலி
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோன்று திமுக, அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் என மற்றும் பல்வேறு பொதுமக்கள், மீனவ அமைப்புகள் என அனைவரும் கடற்கரையில் ஒன்று திரண்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையும் படிங்க:நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா - சிலை திறந்துவைத்தார் முதலமைச்சர்