டெல்லி : மக்கள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிற்கு பிறகு ரயில் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். முன்னதாக, அப்துல் கலாம், 2006ஆம் ஆண்டு டெல்லியிருந்து டேராடூனுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்க ரயிலில் சென்றிருந்தார்.
டெல்லி சப்ஜர்தங் ரயில் நிலையத்திலிருந்து கான்பூருக்கு சிறப்பு ரயில் மூலமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது மனைவியும் உடனிருந்தார்.
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் 2017இல் பதவியேற்ற பின்னர் சொந்த ஊருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். நான்கு நாள்கள் பயணமாக சொந்த ஊர் சென்றுள்ள ராம்நாத் கோவிந்த் அங்கு குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் நண்பர்களை சந்திக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு!