கொல்கத்தா: சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மக்கள் நிவாரணக் குழு (பிஆர்சி) 1943இல் நிறுவப்பட்டது. அப்போதிருந்து, பிஆர்சி இயற்கை பேரிடர்களின் போது குறைந்த செலவில் கண்டறியும் மற்றும் மருத்துவ வசதிகளை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தற்போது 80வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்த 80வது ஆண்டு விழாவில் ஆண்டு முழுவதும் 80 திட்டங்களை செயல்படுத்த பிஆர்சி திட்டமிட்டுள்ளது. அவற்றுள் குறிப்பாக குடலிறக்க அறுவை சிகிச்சையை 50 ரூபாய்க்கு தர உள்ளோம். நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கான இந்த சேவை ஆண்டு முழுவதும் தொடரும் என மக்கள் நிவாரணக் குழுவின் செயலாளர் டாக்டர் ஃபுவாட் ஹலீம் நம்மிடம் தெரிவித்தார். மேலும், பிஆர்சி தலைவரும், பிரபல திரைப்பட இயக்குநருமான கமலேஸ்வர் முகர்ஜி கூறுகையில்,
"பொது ஹெர்னியா அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 செலவாகும். ஆனால், இந்த அறுவை சிகிச்சை 50 ரூபாய்க்கே செய்யப்படும். இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரின் குடிசைப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தலசீமியா, ஹீமோகுளோபின் தொடர்பான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு அதிகம் - ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்