குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமைந்துள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா நவ.21ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2600 பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்.
இந்த நிகழ்வுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, 45 மெகாவாட் சூரிய ஆலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இதுமட்டுமின்றி, பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தில் ‘கண்டுபிடிப்பு மற்றும் இன்குபேஷன் (அடைகாக்கும்) மையம் - தொழில்நுட்ப வணிக காப்பகம்’, ‘மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையம்’ மற்றும் ‘விளையாட்டு வளாகம்’ ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் மோடி!