டெல்லி: அதிக சப்ஸ்கிரைபர் கொண்ட உலகத்தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியப் பிரதமரின் யூடியூப் சேனல் கடந்த செவ்வாயன்று 1 கோடி சப்ஸ்கிரைபர்களை கடந்தது. இதன் மூலம் உலகளாவிய அரசியல் தலைவர்களில் மோடியின் சேனலுக்கே அதிக சப்ஸ்கிரைபர் உள்ளனர்.
பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸ்னாரோ 36 லட்சம் பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி ஆன்ரஸ் மேன்வல் லோபஸ் ஒபேரடர் 30.7 லட்சம் பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மவுசு குறையும் வெள்ளை மாளிகை
இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடா 20.8 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 19 லட்சமாக குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சேனலுக்கு 7.03 லட்சம் subscriber மட்டுமே உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 5.25 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் 4.39 லட்சம் சப்ஸ்கிரைபர் வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினின் யூடியூப் சேனலுக்கு 2.12 லட்சம் சப்ஸ்கிரைபர் உள்ளனர்.
இதையும் படிங்க:நரேந்திர மோடியைச் சந்திக்க விரும்பும் கோவை இட்லி பாட்டி