டெல்லி: தென்மேற்கு பருவமழை காரணமாக பார்மர், பில்வாரா, தோல்பூர், அலிகார், மீரட், அம்பாலா மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 19ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற 7ஆம் தேதி வரை பருவமழை தீவிரமடைய வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவமழையின் தாக்கம் டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பரவலாக காணப்படவில்லை.
ஜூலை 7ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அடுத்த சில தினங்களில் பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பில்லை. வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவில்லை. இதனால் மழை சீரான நிலையில் பெய்கிறது.
எனினும் ஜூலை 7ஆம் தேதிக்கு பிறகு, வெப்பச்சலனம் காரணமாக பருவமழை அதிகரிக்கும். அப்போது வடஇந்திய பெருங்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை ஏற்படக் கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 9 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!