இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருந்து, பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், சோமாலியா நாட்டிற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தடுப்பூசி வழங்குவதில் இந்தியாவின் சேவையை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக நலனுக்கான வளங்களை பகிர்ந்துக்கொள்ளலாம் - பிரதமர் மோடி