டெல்லி: நாட்டில் இன்று 53 ஆயிரத்து 256 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 88 நாள்களில் இல்லாத வகையில் குறைவாகும். நாடு முழுக்க 7 லட்சத்து 2 ஆயிரத்து 887 பாதிப்பாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “நாடு முழுக்க 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 1,422 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 65 நாள்களில் குறைவாகும்.
அதேபோல் புதிய பாதிப்பும் 2.35 விழுக்காடாக உள்ளது. கோவிட் தாக்குதலில் இருந்து மீண்டவர்கள் 96.36 விழுக்காடாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13 லட்சத்து 88 ஆயிரத்து 699 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில் இதுவரை 39 கோடியே 24 லட்சத்து 7 ஆயிரத்து 782 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 பேர் கோவிட் பெருந்தொற்று பரவலால் மரணித்துள்ளனர்.
அந்த வகையில், மகாராஷ்டிரா (1,17,961), கர்நாடகா (33,885), தமிழ்நாடு (31,197), டெல்லி (24,914), உத்தரப் பிரதேசம் (22,178), மேற்கு வங்கம் (17,348), பஞ்சாப் (15,826) மற்றும் சத்தீஸ்கர் (13,387) எனப் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: செப்டம்பரில் மூன்றாவது அலை உச்சம் பெறும்- கான்பூர் ஐஐடி