ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புலனாய்வு துணை இயக்குநர் ஒருவர் நேற்று (மே18) பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட சென்ற போது எதிர்பாராத விதமாக அரங்கத்திலிருந்து கீழே விழுந்து உயிர் இழந்தார்.
தெலங்கானாவில் நாளை (மே 20) துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை கண்காணிக்க புலனாய்வு மற்றும் அம்மாநில காவல்துறையினரும் நேற்று சென்றனர்.
அந்தக் குழுவில் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் குமாரும் பங்கேற்றார். குழுவினர் அரங்கத்தில் மேல் நின்று பார்வையிட்டு கொண்டிருக்கும் போது திடீரென கால் இடறி அரங்கத்தில் இருந்து கீழே விழுந்தார்.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தெலங்கானா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். துணை குடியரசுத் தலைவர் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்த IB (Intelligence Bureau) அலுவலர் பிகாரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இலங்கை போல் காட்சியளிக்கும் இந்தியா- ராகுல் காந்தி