ETV Bharat / bharat

அரியவகை மரபணு நோயால் அவதிப்பட்ட மகன்.. சிகிச்சைக்காக ரூ.16 கோடி நிதி திரட்டிய தம்பதி!

மும்பை: அரியவகை மரபணு நோயால் அவதிப்பட்ட ஐந்தரை வயது மகனின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் நிதியை குஜராத் தம்பதியினர் திரட்டியுள்ளனர்.

Gujarat couple
Gujarat couple
author img

By

Published : May 6, 2021, 6:06 PM IST

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுவன் தைர்யராஜூக்கு, முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்னை இருந்துள்ளது. நெடுநாளாக இப்பிரச்னையால் அவதிப்பட்டு வந்த தங்கள் மகன் தைர்யராஜை குணப்படுத்த சிறுவனின் பெற்றோர் பல வழிகளில் போராடினர்.

ஆனால், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு முறை செலுத்தப்படும் ஊசியான 'ஜோல்ஜென்ஸ்மா' (Zolgensma) என்ற மருந்தை வாங்கி வரப் பரிந்துரைத்தனர். இந்த மருந்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என விசாரித்த சிறுவனின் பெற்றோருக்கு, மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதிக விலையுடைய அந்த மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அதிகளவில் நிதி தேவைப்பட்டது. ஆனால் சிறுவனின் பெற்றோருக்கு இது பெரியத்தொகை என்பதால், மகனின் சிகிச்சைக்கான நிதித் திரட்டத் தொடங்கினர். கிட்டத்தட்ட 71 நாள்களில், 2 லட்சத்து 64 ஆயிரத்து 660 பேர் நிதியுதவி செய்ததில், தைர்யராஜின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.

தற்போது சிறுவன் தைர்யராஜ், மும்பையிலுள்ள பி.சி இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கு நேற்று(மே.4) காலை ஜோல்ஜென்ஸ்மா ஊசி மருந்து செலுத்தப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தைர்யராஜூக்குச் செலுத்திய ஊசிக்கான இறக்குமதி விலையில், 6.5 கோடி ரூபாயை மத்திய அரசு தள்ளுபடி செய்து உதவியுள்ளது.

முதுகுத்தண்டுவட அரிய நோயான ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனும் நோய் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்குத் தேவையான புரதங்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். இதனால் நரம்பு மண்டலம் முழுக்கப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கவும் நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி... ரகசியமாக வெளியேறிய மருத்துவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.