ETV Bharat / bharat

சுகாதாரத்துறையில் அரசின் செலவீனம் அதிகரிப்பு - அறிக்கையில் தகவல் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதாரச் செலவினத்தின் பங்கு 1.15% இல் இருந்து 1.35%ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையில் அரசின் செலவீனம்
சுகாதாரத்துறையில் அரசின் செலவீனம்
author img

By

Published : Nov 30, 2021, 2:29 PM IST

2017-18ஆம் ஆண்டின் நாட்டிற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய சுகாதார அமைச்சகத்தால் 2014 இல் தேசிய சுகாதார கணக்குகள் தொழில்நுட்ப செயலகமாக நியமிக்கப்பட்ட தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் தயாரித்த ஐந்தாவது தொடர்ச்சியான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகளின் அறிக்கை இதுவாகும்.

உலக சுகாதார அமைப்பு வழங்கிய சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார கணக்குகளின் அமைப்பு 2011ஆன் அடிப்படையில் கணக்கியல் கட்டமைப்பைப் பயன்படுத்தி தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

2017-18ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகள், சுகாதாரத்திற்கான அரசு செலவினங்கள் அதிகரித்து வருவதைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பொது சுகாதார முறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதையும் காட்டுகின்றன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் சுகாதாரச் செலவினத்தின் பங்கு 1.15% (2013-14) ஆக இருந்து 1.35% (2017-18) ஆக அதிகரித்துள்ளது.

மொத்த சுகாதார செலவினத்தில் அரசு சுகாதார செலவினத்தின் பங்கு 28.6% (2013-14) ஆக இருந்து 40.8% ஆக (2017-18) அதிகரித்துள்ளது.

2013-14 முதல் 2017-18 வரை தனிநபர் செலவினம் ரூ. 2,336இல் இருந்து ரூ.2,097 ஆக குறைந்துள்ளது என்று தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் அறிக்கை தெரிவிக்கிறது." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.