பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா எனப்படும் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 2021-22ஆம் நிதியாண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டைவிட ரூ.305 கோடி அதிகமாகும். 2016ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கிய இந்தத் திட்டத்தின்கீழ் 5.5 கோடி விவசாயிகள் பயன்பெற்றுவருகின்றனர்.
குறிப்பாக பேரிடர் காரணமாக பாதிப்பைச் சந்திக்கும் சிறு, குறு உழவர்களின் நலனுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவோரில் 84 விழுக்காட்டினர் சிறு, குறு விவசாயிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வதந்திகளைப் பரப்புவது கருத்து சுதந்திரம் அல்ல - பிரகாஷ் ஜவடேகர்