பிரிட்டன் நாட்டில் புதிய வகை கோவிட் வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் நிலவுவதால், அந்நாட்டிற்கு பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை டிச.23 முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள விமானப் போக்குவரத்து அமைச்சகம், 22ஆம் தேதி வரை வரும் நபர்கள் அனைவரும் RT-PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவுவதாக செயதிகள் வெளியாகிறது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
அமைச்சகம் சார்பில் உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து விமானப் போக்குவரத்துத் தடை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர்