ETV Bharat / bharat

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 22, 2021, 9:18 PM IST

திருப்பதி வருமானம்- வெளிநாட்டு கரன்சிகள் சரிவு!

திருப்பதியில் வெளிநாட்டு கரன்சிகள் வருமானம் சரிவை கண்டுள்ளன. இதற்கிடையில் பாகிஸ்தான் நாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நான் பிராமணனாக உணர்கிறேன் - சுரேஷ் ரெய்னா பேச்சுக்கு ரசிகர்கள் கொந்தளிப்பு

சென்னை அணிக்கு நீண்ட நாளாக விளையாடிவருவதாலும், தமிழ்நாடு கலாசாரத்தை உற்றுநோக்கி வருவதாலும் நானும் பிரமாணனைப்போல் உணர்கிறேன் என்று சிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு: சுமார் ரூ.26 லட்சம் பறிமுதல்

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு, தொழில் நிறுவனங்கள், அவரது சகோதரர் வீடு, நிறுவனங்கள் என சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியதில், சுமார் 26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் - மூணாறு இடையே சாலை அமைக்க பேச்சுவார்த்தை - அமைச்சர் எ.வ.வேலு

கொடைக்கானல் - மூணாறு இடையே சாலை அமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

'பாபா... பாபா...' - வேனின் பின்னே ஓடிய மக்களால் பரபரப்பு

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நேற்று காவல் நீட்டிப்புக்காக செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரைக் காண குவிந்த பக்தர்கள், "பாபா... பாபா..." என அழுதபடியே, அவரை அழைத்துச் சென்ற வேனின் பின்னே ஓடினர்.

ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு'

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'திட்டம் இரண்டு' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை.23) வெளியாகிறது.

தன் பிறந்த நாளன்று மகனுக்குப் பெயர் சூட்டிய யோகி பாபு

நடிகர் யோகி பாபு, தனது பிறந்த நாளன்று மகனுக்குப் பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார்.

கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை

திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு, காவல் துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்துவருகிறது; இந்த விவகாரத்தில் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தினால் விமானத்தில் அனுமதி

சென்னையிலிருந்து கேரளா, மகாராஷ்டிரா செல்லும் விமான பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என்று விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

TNPL 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் மோதல்; டிராகன்ஸ் பேட்டிங்

திண்டுக்கல், மதுரை அணிகள் மோதும் டிஎன்பிஎல் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.