ஹைதராபாத் : நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 230 பேர் புதிதாக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 230 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உயிரிழப்பு 555 ஆக பதிவாகியுள்ளது. ஆக, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 5 ஆயிரத்து 155 ஆக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
3 கோடியே 7 லட்சத்து 43 ஆயிரத்து 972 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். இதுவரை 45 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 723 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
46 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரத்து 723 பேரின் சளி மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூலை 29) மட்டும் 18 லட்சத்து 16 ஆயிரத்து 277 பேரின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலின் மூன்றாம் அலை ஆகஸ்ட் இறுதியில் ஏற்படக்கூடும் என ஏற்கனவே சுகாதார நிபுணர்கள் முன்னறிவித்துள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டெல்லி உயிரியல் பூங்கா திறப்பு