டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள சிறாருக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்மூலம் இந்தியாவில் உள்ள சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்பது உறுதியானது. இந்த நிலையில், சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆய்வில் உறுதியாகி உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2 முதல் 18 வயதுகுட்பட்ட சிறார்களிடம் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 374 பேர் லேசான மயக்கம், காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், இந்த அறிகுறிகள் ஒரே நாளுக்குள் தீர்ந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் இடத்தில் வலி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது பொதுவான நிகழ்வு என்பதால், ஒருநாள்களில் சரியாகிவிட்டது. குறிப்பாக தடுப்பூசி பக்க விளைவுகளான தசையின் வீக்கம், ரத்தம் உறைதல் ஆகியவை ஏற்படவில்லை. இப்படி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகளில் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஆயிரத்தை நெருங்கும் ஒமைக்ரான்