இது குறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் பாரதிதாசன் கூறுகையில், "சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. அதனால், ஏப்ரல் 9 மாலை 6 மணிமுதல் 19ஆம் தேதிவரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுகிறது.
அதன்படி, நாளை மாலை முதல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளுக்கும் சீல் வைக்கப்படும். மதுபானம், வணிக நிறுவனங்கள், கடைகள் பூட்டப்படும். அத்தியாவசிய பொருள்கள் விற்பனை மட்டும் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ராய்ப்பூரில் இரண்டாயிரத்து 821 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளைவிட ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா இரண்டாவது அலை... குஜராத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு!