மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள வர்தாவில் இளம்பெண் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது. உயிருக்குப் போராடிவரும் நிலையில் அவர் தற்போது சிகிச்சைக்காக நாக்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அப்பெண்ணின் முன்னாள் காதலனின் தொந்தரவால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தகாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். காவல் துறையினரின் விசாரணைக்குப் பிறகே அவர் தீக்குளித்ததற்கான காரணம் அறியப்படும்.
இதையும் படிங்க: வன்கொடுமைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட சிறுமி - காவல் துறை விசாரணை