சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் இதுவரை 308 பேர் உயிரிழந்தும், எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதித்தும் உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் நேற்று மாலை மட்டும் மேலும் 15 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 420ஆக அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 66 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...'கோவிட்-19க்கு எதிராக போர்க்கால அடிப்படையில் தீர்வை உருவாக்குங்கள்'- ஹர்ஷவர்தன்