ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடேஷ்பட்டினம் என்ற கிராமத்தில் இயங்கிவந்த எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற தனியார் ரசாயனத் தொழிற்சாலையில், கடந்த மே 7ஆம் தேதி ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது.
இந்த விஷவாயு கசிவால் அப்பகுதி சுற்று வட்டாரக் கிராமங்களில் வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த ஸ்டைரீன் விஷவாயுக் கசிவினால், இதுவரை ஒரு சிறுமி உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 585 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இதுதொடர்பாக ரசாயன தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி, 2 இயக்குநர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.