நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு இடம் கூட வெல்லாமல் தோற்றதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, தேஜ் பிரதாப் யாதவ் பதிலளித்ததாவது:
நாங்கள் தோற்றுவிட்டோம். ஆனால், அடுத்து வரும் தேர்தல்களில் கவனம் செலுத்துவோம். பீகாரில் நடைபெற்றுமுடிந்த தேர்தலில் முக்கியத்துவமான கூட்டணி அமைத்தோம். ஆனால், எனக்கு கிடைத்த தகவலின்படி, தலைவர்கள் சண்டை போட மட்டுமே ஒன்றிணைந்தார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், முக்கிய கூட்டணி அல்லது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் தேஜஸ்வினுடைய தலைமை பிடிக்கவில்லை என்பவர்கள், விலகிக்கொள்ளலாம் எனவும், நான் கிருஷ்ணரைப் போன்றவன் எனவும் கூறினார்.
அவருடைய ட்விட்டரில், தேஜஸ்வினுடைய தலைமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கட்சியிலிருந்து விலகலாம் எனவும் பதிவிட்டிருந்தார்.
ஆர்ஜேடி கட்சியின் தோல்விக்குப் பிறகு யாதவ், தேஜஸ்விக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் , தேர்தலில் யாருக்கு சீட் வழங்கப்பட்டதோ, அவர்கள்தான் தோல்விக்குரியப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பீகாரில் நடைபெற்ற முடிந்த மக்களைவத் தேர்தலில் ஆர்ஜேடி கட்சி மெகா கூட்டணி அமைத்தும், ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதுவரை இப்படி ஒரு படுதோல்வியை அக்கட்சியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.