புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்திக்கு வரும் பக்தர்களுக்கு அங்குள்ள யானை லட்சுமி ஆசிர்வாதம் வழங்கும். அதன் பின்னர் காந்தி வீதி சிவன் கோயிலுக்கு யானை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்கவைக்கப்படும்.
இந்த நிலையில், யானை லட்சுமி சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், யானை கடந்த ஒரு மாதமாக சிவன் கோயிலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆக.22) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு லட்சுமி யானைக்கு சிவன் கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி: மெரினா கடற்கரை சாலையில் காவல் ஆணையர் ஆய்வு!