ஆஸ்ட்ரோபிசிக்கல் என்ற பத்திரிகை செவ்வாய் கிரகத்தை பற்றி தொடர்ந்து ஆய்வு கட்டுரை வெளியிட்டுவருகிறது. செவ்வாய் கிரகத்தில் உப்பு தண்ணீர் உருவாக வாய்ப்புள்ளதாக இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருகுநிலை அடைவதற்குள் பனிக்கட்டி வளிமண்டலத்தில் உருகிவிடும் என ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் வளிமண்டல அழுத்தம் எனவும் கூறப்படுகிறது.
குளிர்ச்சியான பனிக்கட்டி பகுதிகளும், வெப்பமான பனிக்கட்டி பகுதிகளும் செவ்வாய் கிரகத்தில் மிகுதியாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. உருகுநிலையை விட வெப்ப நிலை அதிகரித்ததால்தான் தண்ணீர் அப்பகுதிகளில் உருவாகியதாக விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார். குறைந்த காலகட்டத்தில் வெப்ப நிலை மைனஸ் 128 டிகிரி செல்சியஸிலிருந்து 10 டிகிரி செல்சியஸ் வரை மாறும் என மூத்த விஞ்ஞானி கூறுகிறார்.
இதையும் படிங்க: 'அதிமுக வெற்றி பெற வாழ்த்துக் கூறிய கமலுக்கு நன்றி' - புதுவித விளக்கமளித்த ஆர்.பி. உதயகுமார்