புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமி. பெற்றோரை இழந்த அவர் அரசு உதவித்தொகையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கும் நாமக்கல் குமாரபாளையத்தைச் சேர்ந்த கேப்டன் என்பவருக்கும் புதுச்சேரியில் திருமணம் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
ஊரடங்கு காரணமாகவும் சரியான வருமானம் இல்லாததாலும் திருமணப் பொருட்கள் வாங்க உறவினர்களும், லட்சுமியும் சிரமப்பட்டனர். இதனை அறிந்த தன்னார்வலர்கள் திருமண மொய் என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதில் லட்சுமியின் நிலையைப் பதிவிட்டனர்.
இதனைக் கண்ட புதுச்சேரி சக்ஷம் அமைப்பு நிர்வாகிகள் புடவை, சீர்வரிசையுடன் நூறு பேருக்கு உணவு வழங்க முன்வந்தனர். லட்சுமி வசிக்கும் நேரு வீதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் மாங்கல்யத்தை மொய்யாக வழங்கினர். மேலும் பலரின் உதவியால், பெறப்பட்ட சீர்வரிசை உள்ளிட்டப் பொருட்களை வாட்ஸ்அப் குழு மூலம் ஒருங்கிணைத்து, லட்சுமியின் உறவினரிடம் வழங்கப்பட்டது.
இச்சம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நோ இ-பாஸ்: மாநில எல்லையில் நடந்த சுவாரஸ்ய திருமணம்!