புதுச்சேரி காலாப்பட்டியில் அமைந்துள்ளது புதுச்சேரி பல்கலைக்கழகம். இங்கு படித்துவரும் மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவில்லை, பல்கலைக்கழக பேருந்து எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளதால் அதனை அதிகரிக்க வேண்டும், அதிகரிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், மாணவர்கள் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் இன்று பல்கலைக்கழக வாயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த போராட்டத்தில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்டு பதாதைகளை ஏந்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.