ராஜஸ்தானில் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கும்பல் ஒன்று பெலு கான் என்பவரை கொலை செய்தது. இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பெலு கான் கொலை வழக்கில் ராஜஸ்தான் அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் நாட்டில் மனிதாபிமானமற்ற செயலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்த கும்பல் கொலை கொடூரமான குற்றம்" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கும்பல் கொலை தொடர்பாக ராஜஸ்தான் அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை வரவேற்பதாகவும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என தான் நம்புவதாகவும் மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.