இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், “நமது பிரதமர், தேச மக்களிடம் சலிப்பை ஏற்படுத்தும் ஒருதலைப்பட்சமான உரையை நிகழ்த்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காணொளி காட்சி மூலமாக உரையாற்றும் அவரிடம், மனதில் நிறைய கேள்விகளை வைத்திருக்கும் மக்கள் அவரிடமிருந்து பதில்களை எதிர்பார்க்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்திய ரூபாய் 500 கொடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய அரசு சொல்வது திட்டமிட்ட ஒரு பொய் பிரச்சாரம்.
கடந்த ஒரு மாதமாக நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக நாட்டிலுள்ள சில்லறை விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் தங்கள் கடைகளை பூட்டி வைத்துள்ளனர். இதனால், அவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு முன்பே, பணமதிப்பிழப்பு, இணைய வர்த்தகம் போட்டி, ஜிஎஸ்டி ஆகியவை ஏற்கனவே அவர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. இந்த சில்லறை விற்பனையாளர்கள் இன்னும் சம்பளம், வாடகை, நிலையான மின்சார கட்டணம், சொத்து வரிகளை வணிக கட்டணத்தில் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் ஐந்தில் ஒரு பங்கை சில்லறை வர்த்தகம் கொண்டுள்ளது. இது சுமார் 2.7 கோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. அவர்களுக்கு மத்திய அரசு உதவ முன்வர வேண்டும்.

கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை அடுத்து மின்சாரம் மீதான நிலையான கட்டணத்தை 2 மாதங்களுக்கு கட்டத் தேவையில்லை என பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் அறிவித்துள்ளதை போல மத்திய அரசும் அறிவிக்க வேண்டும்.
தினக்கூலித் தொழிலாளர்களுக்கும், சுயதொழில் முனைவோருக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்களை அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்க வைக்க போதுமான அளவு ரேஷன் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : ம.பி.யில்., பிறந்து 9 நாளே ஆன குழந்தைக்கு கரோனா உறுதி!