ETV Bharat / bharat

மக்கள் குரல் முகாம் - 80 விழுக்காடு குறைகள் நிவர்த்தி!

author img

By

Published : Oct 29, 2019, 6:36 PM IST

புதுச்சேரி: மக்கள் குரல் என்ற குறைகேட்பு முகாமில் 80 விழுக்காடு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Puducherry

புதுச்சேரியில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து 'மக்கள் குரல்' எனப்படும் மக்கள் குறைதீர் முகாமை ஏம்பலம் தொகுதியில் இன்று நடத்தினர். முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

முகாமில் அந்தந்த துறைக்கான குறை கேட்கும் அரங்கங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனைப் பூர்த்தி செய்யாது குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவருகின்றன.

மக்கள் குரல் என்ற குறைகேட்பு முகாம்

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கடந்த முறை நெட்டப்பாக்கம் பகுதியில் முதல்முறை நடைபெற்ற மக்கள் குரல் என்ற குறைகேட்பு முகாமில் ஆயிரத்து 200 குறைகேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதில் 80 விழுக்காடு புகார் மீதான குறைகள் நிவர்த்தி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆவர், புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் மக்களுக்கான திட்டத்தை அலுவலர்களிடம் கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டுமே தவிர கேள்விகள் கேட்கக் கூடாது என்றும் கூறினார். அலுவலர்கள் காலதாமதம் செய்து கோப்புகளைத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: அடகு நகைகளை மீட்பதாகக் கூறி வழிப்பறி - விசாரணையில் அம்பலம்

Intro:மக்கள் குரல் என்றகுறைகேட்பு முகாமில் 80% குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முதல் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி அனைத்துத்துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மக்கள் குரல் எனப்படும் மக்கள் குறைதீர் முகாம் ஏம்பலம் தொகுதியில் இன்று நடைபெற்றது முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி கமலக்கண்ணன் உள்ளிட்டோர் மற்றும் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர் முகாமில் அந்தந்த துறைக்கான குறை கேட்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்யப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றனர்

முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மக்கள் குரல் என்ற குறை கேட்கும் முகாமினை துவக்கி வைத்தார் விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி

கடந்த முறை நெட்டப்பாக்கம் பகுதியில் முதல் முறையாக மக்கள் குரல் என்ற குறைகேட்பு முகாம் நடைபெற்றது அதில் 1200 குறைகேட்பு மனுக்கள் பெறப்பட்டன அதில் 80% புகார் மீதான குறைகள் நிவர்த்தி பெற்றுள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார்

மேலும் பேசிய அவர் புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு மக்களுக்கான திட்டத்தை அதிகாரியிடம் கொடுத்தால் அதை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் அதற்கு பதிலாக கேள்விகள் கேட்கக் கூடாது அதிகாரிகள் காலதாமதம் செய்து கோப்புகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர் என அவர் குற்றம் சாட்டினார்

அமைச்சரவையில் திட்டங்கள் முடிவு செய்து அதை அதிகாரிகள் ஆமை வேகத்தில் செயல்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்

குறைகேட்பு மக்கள் குரல் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Conclusion:மக்கள் குரல் என்றகுறைகேட்பு முகாமில் 80% குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முதல் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.