ரயில்கள், வளாகப் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 2017ஆம் ஆண்டு 51ஆக இருந்தது. இது 2019ஆம் ஆண்டு 44 ஆக குறைந்துள்ளது. எனினும் 2018ஆம் ஆண்டு இதுபோன்ற குற்றங்கள் 70 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல் மத்தியப் பிரதேச மாநிலம் நீமூச் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இக்கேள்வியைக் கேட்டார். அதன்படி ரயில்வே வளாகத்தில் 136 பேரும், ரயிலில் 29 பேரும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 51 பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 41 ரயில்வே வளாகத்தில் 10 ரயிலிலும் நடந்துள்ளது. 2018ஆம் ஆண்டு பதிவான 70 வழக்குகளில் 59 ரயில்வே வளாகத்திலும் 11 ரயிலும் பதிவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு நிலவரப்படி 36 பாலியல் வன்புணர்வு வளாகத்திலும், எட்டு ரயிலிலும் அரங்கேறியுள்ளது.
இந்த மூன்று ஆண்டுகளில் 771 கடத்தல், நான்காயிரத்து 718 கொள்ளைகள், 213 கொலை முயற்சிகள் நடந்துள்ளன. இதுமட்டுமின்றி ரயில்வே வளாகங்கள், உள் ரயில்களில் 542 கொலைகள் நடந்துள்ளன. ரயில்வே பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு ஹெல்ப்லைன் 182 செயல்படுகிறது.
பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண் பயணிகள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிக்குள் நுழையும் ஆண்கள் மீது இந்திய ரயில்வே சட்டம், 1989இன் பிரிவு 162இன்கீழ் வழக்குத் தொடரப்படுகிறது.
2018, 2019ஆம் ஆண்டுகளில் முறையே மொத்தம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 170 ஆண் பயணிகள் மீது பெண்கள் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அங்கீகரிக்கப்படாத நுழைவு அல்லது பயணம் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பைக் கவனத்தில்கொண்டு, பெருநகரங்களில் பெண் காவலர்கள் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். பாதுகாப்பை மேம்படுத்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 551 ரயில் நிலையங்களில் சிசிடிவி வழங்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டில் ரயில்வே வளாகங்கள், உள் ரயில்களில் மொத்தம் 55 ஆயிரத்து 826 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதுவே 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 71 ஆயிர்தது 55 ஆக இருந்தது. இந்தக் குற்றங்களின் குறைவுக்கு சிசிடிவியின் வருகை முக்கியமானதாக உள்ளது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: பவன் குமாரின் மறுசீராய்வு மனு தள்ளுபடி