மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் துறை தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த மசோதாவில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை விளக்கி தங்களது எதிர்பை பதிவு செய்தனர்.
மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமையும் தொடர்ந்து நடத்தி அதன் பின்னரே வாக்குகெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நிராகித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
பேரவை விதிகள் அடங்கிய ஆவணப் புத்தகத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக மாநிலங்களவை செயலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, இன்று (திங்கள்கிழமை) பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.